தேடலே வாழ்க்கை
வாழ்க்கையே தேடல்
ஒரு சீதையின் தேடல்
இராமாயாணம் ..
ஒரு சிலம்பின் தேடல்
சிலப்பதிகாரம் ..
ஒரு கணையாழியின் தேடல்
சாகுந்தலம்
ஆதி மனிதன்
கல்லைத் தேடி
வேட்டையாடினான்
இன்று மனிதன்
நிலவில் சென்று
கல்லைத் தேடினான்
தேடலில்லா வாழ்க்கை
தேறாத வாழ்க்கை
நேற்றைய தேடல்
இன்றைய சொகுசு
இன்றைய தேடல்
நாளைய சேமிப்பு
– அப்துல் கையூம்
சீ..ச்..சீ
டெய்லரா அவன்..?
சட்டைப்பை இல்லாமல்
சட்டையா..?
சண்டையிட
கிளம்பினேன்.
போகட்டும் கழுதை ..
இருந்தால் மட்டும்
என்னதான் வாழுதாம் ..?
அப்துல் கையூம்