மச்சினச்சி இல்லாத வீடு
மச்சினச்சி இல்லாத மாமனார் வீட்டில் கலகலப்பே இருக்காதாம். யாரோ ஒரு புண்ணியவான் இந்த உண்மையை கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். (நான் அவனில்லை. ஏனெனில் எனக்கு மைத்துனியே இல்லை.)
யோசித்துப் பார்த்ததில் உண்மை இருப்பதாகத்தான் தோன்றியது. மச்சினச்சி உள்ள வீட்டில் குறும்பு, கேலி, கிண்டல், நையாண்டி இவற்றுக்கு பஞ்சமிருக்காது. மச்சினச்சி இல்லாத வீட்டில் கலகலப்பு சற்று கம்மியாகவே இருக்கும்.
நான் சமீபத்தில் படித்த உருதுக் கவிதையின் மொழியாக்கம் :
உஸ் கர்மே க்யா மஜா ஜிஸ்மே லோலி நா ஹோ
உஸ் ஜ(Z)பான்மே க்யா மஜா ஜிஸ்மே கா(G)லி நா ஹோ
உஸ் மெஹஃபில்மே க்யா மஜா ஜிஸ்மே தாலி நா ஹோ
உஸ் சஸரால்மே க்யா மஜா ஜிஸ்மே ஸாலி நா ஹோ”
“எப்படி தாலாட்டு இல்லாத வீட்டில் கலகலப்பு இல்லையோ, எப்படி வசை இல்லாத மொழியில் கலகலப்பு இல்லையோ, எப்படி கைத்தட்டல் இல்லாத சபையில் கலகலப்பு இல்லையோ, அது போன்று மைத்துனி இல்லாத மாமியார் வீட்டில் கலகலப்பு சற்றும் இருக்காது”
மைத்துனி இல்லாதவர்கள் இதனைப் படித்து வயிற்றெரிச்சல் அடைந்தால் நான் அதற்கு பொறுப்பில்லை.
அப்துல் கையூம்
No trackbacks yet.