கவிஞர் ஷபி
போன்சாய் – ஒரு பார்வை
போன்சாய்.. ..
உளியை ஓரங்கட்டி
ஊசியினாலேயே
உருவாகிய சிலை
பார்த்துவிட்டு
போட்டுவிட
பாக்கெட் நாவலா..?
“அசைபோட்டுப்
பார்க்கிறேன்”
மனதோடு
மல்யுத்தம் நடத்தும்
வரிகளை
மீண்டும் மீண்டும்
அசை போட்டு
பார்க்கிறேன்
“தலைப்பின்றியே போகட்டும்
என் கவிதை”
கவிஞனுக்கேயுள்ள கர்வம்
தன்னம்பிக்கையாய்
“உலகச் சந்தையில்
இந்தியத் தோல்”
தாய் நாட்டைத் துறந்து
வெளிநாட்டு மோகத்தில்
அடிமையாகும்
சுதந்திர புருஷர்களுக்கு
ஒரு குட்டு
“தாமரை இலை”
சாபமாய்ப் போன உறவு.
பேதைப் பெண்களின்
முரண்பாடு
“ஏவுகணை ஏலம்”
புத்தன் – காந்தியின்
அஹிம்சையை
போதிக்கும்
தீவிரவாதி
“தேடலில்லா வாழ்க்கை
தேறாத வாழ்க்கை”
சிந்திக்காதவன்
வாழ்க்கை
நிந்திக்கத்தக்கது
தீர்க்க தரிசனம்
“வரவேற்பறையில்
கண்ணாடி கல்லறை”
உயிரினங்களை
கூண்டிலடைத்து
ஆனந்தமடையும் மனிதன்
அவன் தரும் பரிசு
சித்திரவதை.
மைதாஸே..!
ஜன்னல் சிறைதனிலே
வரதட்சணை ஓலம்
பாவம் முதிர்க்கன்னிகள்
“புதியதொரு நிறத்தைக்
கண்டு பிடியுங்கள்”
வண்ண விளம்பரத்தால்
அரசியல்வாதிகளின் ஏலம்
“அழத்தொடங்கி”
அழுகையை
கேடயமாக்கும்
காரியவாதிகளுக்கு
வாழ்க்கை உபதேசம்
தத்துவ ஞானம்
படிமப் பாதையில்
தடம் புரளா
புதுக்கவிதை
பெட்டகம்
மனதோடு
மல்யுத்தம் நடத்தும்
வரிகளை
அசை போட்டுப்
பார்க்கிறேன்
பாக்கெட் நாவலா
பார்த்துவிட்டு
போட்டு விட ?
வாசகனாய்
வலம் வந்தபோது
இதயத்தில்
சிம்மாசனமிட்ட
உணர்வுகளை
பரிமாறும்
No trackbacks yet.