Archive for October, 2007

பள்ளிப் பாடம்

barathiyar.jpg  

நாகூர்

செட்டியார் ஸ்கூலில்

நாயுடு சார்

நடத்துகிறார்

பாரதியார் பாடம்

“சாதிகள் இல்லையடி பாப்பா”

அப்துல் கையூம்

vapuchi@hotmail.com

பேசும் கற்கள்

tajmahal.jpg

அந்த கற்கள் பேசுமா? 

ஆம் .. பேசும். 

எத்தனைக் கோடி

மனிதர்களிடம்

இதுவரை அது

உறவாடியிருக்கும்? 

எண்ணிக்கையில்லை.. .. 

எத்தனை எத்தனை

மொழிகளில்

இதுவரை அது

உரையாடியிருக்கும்? 

ஏதும் தெரியவில்லை .. 

“என்னைப் பார்

என் அழகைப் பார்” என

எதார்த்தமாய் மொழியும்

ஏதோ ஒரு மொழி 

அது மட்டும் நிதர்சனம்.  

அம்மொழி செம்மொழி

நம்மொழி போல 

காலையில் ஒரு தொனி;

மாலையில் ஒரு தொனி;

முழுநிலவின்போது

மொழியும் அழகே தனி ! 

அன்று முதல்

இன்று வரை

மாறாத குரல் வளம் ! 

மாசுக் காற்றில்

குரல் சற்று

குன்றிப் போயிருக்கலாம்

அவ்வளவே.. 

உயிராயிருந்த அகலிகை

கல்லானது

புராணம் ! 

உயிரில்லாதகற்கள்

உயிரோட்டமானது

வரலாறு ! 

அது சாபம்

இது வரம் ! 

வரம் தந்தவன்

ரசனையுள்ள

முனிவன் போலும் ! 

தாஜ்மகாலே பேசு!

பேசிக் கொண்டே இரு.. 

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com 

P – 137

கேள்விக்குறிகளே ..!
          ஒற்றைக் காலில்
          ஏனிந்த வேள்வி..?
வினாக்களின் பாரத்தில்
வில்லாய் வளைந்தீரோ..?
          குனிந்து தேடுவது
          விடைகளையா..?
வினாக்களுக்கேது
முற்றுப் புள்ளி ..?
          அதைத்தான்
          போட்டு மிதித்து
          ஏறி நின்று விட்டீரே..?
அப்துல் கையூம்

P – 138

p-138.jpg 

காபி என்பதா ..?

காப்பி என்பதா…?

காஃபி என்பதா ..?

“குளம்பியே” விட்டேன்.. !

          – அப்துல் கையூம்

P – 139

p-139.jpg 
வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்
          ஏனிந்த தளர்நடை
கைகளைத்
தொங்க விட்டு
          பாதையில் குனிந்தபடி
          பனிதுருவத்தில் பென்குயின் .. !
அப்துல் கையூம்

P – 140

p-140.jpg 
மரத்துப் போனது
வெறும் உடம்புதான்
          இதொ பார் என்
          நெஞ்சுக்ககுள் ஈரம்
சொட்டுச் சொட்டாய்
கசியும் ரப்பர் பால்  
          அப்துல் கையூம்       

P – 141

p-141.jpg 
முதுமைக்கு
முன்னுரை;
          வயதுக்கு
          பகவுரை;
காதோரம்
பதிப்புரை;
          இலேசாய்
          இளநரை.
அப்துல் கையூம்

P – 142

இருப்பதை
கண்டு பிடிப்பதில்
ஏற்றமென்ன ..?
          இல்லாததைக்
          கண்டுபிடித்தானே
          இந்தியன் ..
அந்த பூஜ்ஜியம்
அவன் புகழ் பாடும்.
          அப்துல் கையூம்

P – 143

p-143.jpg 
இரவல் தந்ததை
இறையவன் கேட்க
          அஃறிணை ஆனார்
          பெரும் பணக்காரர்
அப்துல் கையூம்

P – 144

இன்றைய மந்தம்
தெளிந்தது
          நாளைய அவசரம்
          புரிந்தது
கலிலே சக்கரம்
கையிலே இயந்திரம்
          சந்ததிகளே !
பந்தயத்திற்கு
முந்துங்கள்
          அப்துல் கையூம்