சீ..ச்..சீ
டெய்லரா அவன்..?
சட்டைப்பை இல்லாமல்
சட்டையா..?
சண்டையிட
கிளம்பினேன்.
போகட்டும் கழுதை ..
இருந்தால் மட்டும்
என்னதான் வாழுதாம் ..?
அப்துல் கையூம்
தேசிய நீரோட்டம்
பேசியே களைத்தோம்
நதிகளுக்கு ஏன்
நாட்டாமை ..?
காவிரிக்கு போதும்
கட்டப் பஞ்சாயத்து
தஞ்சைத் தரணியில்
தவமாய்த் தவமிருந்து
நம்பியே அதனை
கும்பி காய்பவனும்
இந்தியப் பிரஜைதான்
இந்தியனே ..
அப்துல் கையூம்