மொழிபெயர்ப்பு கவிதை

bharathi.jpg 

பாட்டுக்கோர் புலவன் பாரதியே !

பைந்தமிழ்ச் சாரதியே !

பகிரங்கமாய் உனக்கோர் கடிதம் .. ..

பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்க்க வேண்டும் என்றாய். உன் வாக்கை படு சீரியஸாக எடுத்துக் கொண்டு நானும் சில பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களை எந்தமிழில் என் சக்தி மசாலாவை சற்றுக் கலந்து படைத்திருக்கிறேன்.

அன்புடன்

அப்துல் கையூம்

_____________________________________________________

திருமணம்

திருமணம் புரி !

அடக்கமான மனைவி

அதிசயமாய்

அமைந்து விடில்

அகமகிழ்ந்து சிரி !

கணக்கு உனது

கணிசமாய் மாறிப்போனால்

கவலையே படாமல்

காவி தரி !

     *     *     *

வங்கி

குடை

கடன் கொடுப்பார்;

வானிலை

தெளிவாய் இருக்கையில்.

‘படக்’கென

பிடுங்கிக் கொள்வார்;

அடைமழை

விடாது பெய்கையில்.

By Robert Frost

     *     *     *

வேடிக்கை

எல்லாமே

நகைப்பூட்டும் ..

பிறருக்கு அது

நடக்கையில்

மட்டும் !

By Will Rogers (1879 1935)

     *     *     *

ஹோனோலூலூ

விடுமுறை கழிக்க

படுஜாலி பிரதேசம்

எல்லாமே கிடைக்கும்..

மழலைகள் களிக்க

மணற்வெளி;

மனைவி காய

வெயில் குளியல்;

முக்கியமாக ..

மாமியார்களுக்கென்று

கடல்நீரில்

சுறாமீன்கள் !!

By Ken Dodd

     *     *     *

சுற்றுச் சூழல்

பின்தங்கிய நாட்டில்

நீர் குடிக்க யோசி !

முன்னேறிய நாட்டில்

சுவாசிக்க யோசி.

அவை யாவும் தூசி !

Jonathan Raban

     *     *     *

பயம்

ஆட்டுக்கு

அருகில் செல்ல

எனக்கு பயம் !

கழுதைக்குப் பின்னால்

கடந்துப் போக பயம் !

முட்டாளிடம் நெருங்க

முழுவதும் பயம்

அவனது

நாலாபுரத்திலும் !!

By Edgar Watson Howe

     *     *     *

பிரம்மச்சாரிகள்

பிரம்மச்சாரிகளுக்கு

கணிசமான வரியினை

கடுமையாக விதியுங்கள்.

பல மனிதர்கள்

வதைக்கப்பட ..

சில மனிதர்கள் மாத்திரம்

மகிழ்சியில் திளைக்க ..

இது என்ன

பாரபட்சம் ..?

(திரு. வாஜ்பாய் அவர்களும். திரு. அப்துல் கலாம் அவர்களும் என்னை மன்னிப்பார்களாக)

By Oscar Wilde

     *     *     *

பிரபலங்கள்

பிரபலமாய் இருப்பதில்

பெரியதொரு வசதி.

நீங்கள்

போரடித்தாலும்

ரசிக்கத் தெரியாதது

இவர்களது குற்றமென

எண்ணிக் கொள்கிறார்கள் !

By Henry Kissinger

     *     *     *

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: